மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் GD மருத்துவமனையின் மற்றும் ஒரு சாதனையை உங்களிடம் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
GD SUPER SPECIALITY மருத்துவமனையின் சிறப்பான நாள்! இந்த இரட்டைக் குழந்தைகள், மருத்துவ காரணங்களால் 31 வாரங்களிலேயே பிரசவித்து பலவீனமாக இருந்தனர்; இருகுழந்தைகளில் குட்டி வீரன் 900 கிராம் எடையும் குட்டி தேவதை வெறும் 540 கிராம் எடையும் கொண்டிருந்தனர். அவர்களை சுவாசிக்க வைப்பது ஒட்டுமொத்த அணிக்கும் பெரும் சவாலாக இருந்தது. இப்படிப்பட்ட குழந்தைகளை ஒரு சிறிய நகரத்தில் அனைத்து வசதிகளுடன் வளர்ப்பது மருத்துவர்களிடையே பெரும் சவாலாக இருந்தது.
அவர்கள் வெண்டிலேட்டர்கள், CPAP, HFNC மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு அவர்கள் தானாக சுவாசிக்க தொடங்கினர். அவர்களுக்கு இரத்த மாற்றம் மற்றும் ELECTROLYTE திருத்தங்கள் செய்தனர். மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு, பகல் பாராது ஒவ்வொரு மணி நேரமும் குழாய்கள் மூலம் அவர்களுக்கு பாலூட்டினர். அதிக பட்சமாக 30 நாட்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் தாயுடன் 1.6 கிலோ மற்றும் 1.2 கிலோ எடையுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
NICU குழுவின் ஒட்டுமொத்த போராட்டத்திற்கு பிறகு கிடைத்த மகிழ்ச்சியான தருணம் அது GD மருத்துவமனையின் வெள்ளி விழா ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய சாதனை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.